வழங்கல் பிரிவின் பொறுப்புக்களும் கடமைகளும்.

  • மேல் மாகாண சபைக்கு உரிய எல்லா காரியாலயங்களுக்காகவும் மாகாண சபை நிதிப் பற்றுச்சீட்டுப் பதக்கங்களைப் பெற்றுக்கொள்ளுதல், வழங்குதல் மற்றும் அதற்கு உரிய ஏடுகளைப் பேணிச் செல்லுதல்.
  • மேல் மாகாண சபைக்கு உரிய எல்லா காரியாலயங்களுக்காகவும் மாகாண சபைக்குரிய படிவங்களைப் பெற்றுக் கொள்ளுதல், விடுவித்தல் அத்துடன் உரிய ஏடுகளைப் பேணிச்செல்லுதல்.
  • மேல் மாகாண சபைக்கு உரிய எல்லா காரியாலயங்களுக்காகவும் லீசிங் முறையில் மற்றும்  கடனுக்குரிய கடிதங்களை திறந்து வாகனங்களைக் கொள்வனவு செய்தல்.
  • பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல் .
  • பிரதம செயலாளரின் கேள்விச் சபையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • கேள்வி வைப்புக்களைப் பொறுப்பேற்றல் மற்றும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
  • வருடாந்த வரவு செலவுத்திட்டத்தினை தயாரிப்பதற்காக பிரதம செயலாளர் காரியாலயத்தின் எல்லாப் பிரிவுகளுக்காகவும் எதிர்வரும் வருடத்திற்குரிய மதிப்பீட்டினைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சமர்ப்பித்தல்.
  • பிரதம செயலாளர் காரியாலயத்தின் எல்லாப் பிரிவுகளுக்காகவும் மூலதனச் சொத்துக்களை கொள்வனவு செய்யும்போது உரிய வருடத்திற்காக பெறுகை திட்டத்தினைத் தயாரித்தல்.
  • பெறுகை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மதிப்பீட்டுச் செயற்குழுவினை நியமித்தல்.
  • பிரதம செயலாளர் காரியாலயத்தின் எல்லாப் பிரிவுகளுக்காகவும் நாளாந்த பாவனைப் பொருட்கள் மற்றும் சொத்துக்களுக்குரிய பெறுகை முறையின் கீழ் பெறுகையினை மேற்கொள்ள பெறுகை முடிவுகளைத் தயாரித்தல்.
  • பிரதம செயலாளர் காரியாலயத்தின் எல்லாப் பிரிவுகளுக்காகவும் உத்தேச பெறுகை முறையின் கீழ் நாளாந்த பாவனைப் பொருட்கள் மற்றும் சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
  • பிரதம செயலாளர் காரியாலயத்தின் எல்லாப் பிரிவுகளுக்காகவும் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களின் பாவனை மற்றும் சேவை நடவடிக்கையினை மேற்கொள்ளுதல்.
  • பிரதம செயலாளர் காரியாலயத்தின் எல்லாப் பிரிவுகளுக்காகவும் சேவை மற்றும் வழங்கல் நடவடிக்கையினை மேற்கொள்ளுதல்
  • அரச செலவு கட்டுப்பாட்டுக் குழு மற்றும் உள்நாட்டு கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • பிரதம செயலாளர் காரியாலயத்தின் களஞ்சியத்தினைப் பேணிச் செல்லுதல், அதற்கு உரிய ஏடுகளைப் பேணிச்செல்லுதல், பொருட் கணிப்பு நடவடிக்கை, மற்றும் பொருட்களை ஏலத்தில் விடும் நடவடிக்கையினை மேற்கொள்ளல்.