கணக்கு மற்றும் கொடுப்பனவுத் திணைக்களத்தின் பொறுப்புக்களும் கடமைகளும்

  1. பிரதம செயலாளருக்குக் கிடைக்கும் கணக்காய்வு அறிக்கைகளுக்கான தெளிவுபடுத்தலினை கணக்காளர் நாயகத்திற்குச் சமர்ப்பித்தல்.
  2. மாகாண அரச கணக்குச் செயற்குழுவில் வழங்கப்படும் கட்டளைகளுக்குத் தேவையான நவடிக்கைகளை மேற்கொள்ளல் .
  3. மாகாண அரச சுற்றறிக்கைகளைத் தயாரித்தல், அதற்காக கௌரவ ஆளுநரின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் நிதிச் சுற்றிக்கைளை வெளியிடுதல்.
  4. பயணிகள் நிதிக் காப்புறுதி நடவடிக்கை.
  5. நிதித் திட்டமிடல் அமைச்சின் மூலம் வெளியிடப்படும் முகாமைத்துவச் சேவைகள் திணைக்களத்தின் சுற்றறிக்கை திறைசேரியின் வழிகாட்டல் சுற்றறிக்கை, அரச வியாபாரச் சுற்றிக்கை, அரச நிதிச் சுற்றறிக்கை மற்றும் பெறுகை நடவடிக்கைச் சுற்றறிக்கைகளை மேல் மாகாண சபைக்கு உரியதாக்கிக் கொள்ளுதல்.
  6. மாதாந்த கணக்குப் பொழிப்புக்களைத் தயாரித்தல்.
  7. வங்கி கணக்கு இணக்கக் கூற்றினைத் தயாரித்தல்.
  8. பல தாபனங்களினது பொருட் கணக்கெடுப்பு நடவடிக்கை.
  9. மாகாண வருமான திணைக்களம், கம்பனிகள் பதிவாளர் காரியாலயம்,  பிரதம செயலாளர் காரியாலயம்,பொறியிலாளர் பணிமனை, ஆகிய தாபனங்களின் திணைக்கள பெறுகைக் குழுக்களை நியமித்தல்.
  10. சிறு கட்டு நிதி மற்றும் குறித்த துணைக் கட்டுநிதிக்கான அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொடுத்தல்.
  11. மாகாண நிதிப் பிரமாணம் 83  இன் கீழ் அதிகாரத்தினை ஒப்படைத்தல்.கட்டு நிதிகளை விடுவித்தல்.
  12. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் மூலம் மானியத்தினைப் பெற்றுக் கொள்ளுதல்.
  13. கட்டுநிதியினைத் தீர்த்தல்.
  14. அரசின் வருமானத்தினைப் பணமனுப்பல் செய்தல் – (தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, முத்திரைக்கட்டணம்).
  15. நாளாந்த முதலீடு நிலையான வைப்பு / றிபோ முதலீடு.
  16. வங்கிக் கணக்குத் தொடர்பான நடவடிக்கை

(வங்கிக் கணக்கினை திறத்தல் மற்றும்  காசோலையினைக் கையொப்பமிட அதிகாரத்தினைக் கையளித்தல்.)