வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பொறுப்புக்களும் கடமைகளும்

  • மேல் மாகாண சபை தாபனங்களுக்கு வருடாந்தத் தேவைகள் தொடர்பான தகவல்கள் வரவழைக்கப்பட்டு அவை மீள்பார்வை செய்யப்பட்டு மதிப்பீட்டின் தேவைகள் உரிய படிவத்தின் மூலம் நிதி ஆணைக்குழுவிற்கு அனுப்புதல்.
  • நிதி ஆணைக்குழுவுடன் தேவைகள் மற்றும் வருமான நிலமை தொடர்பாக கலந்துரையாடி மானியத்தின் சிபார்சினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
  • வருடாந்த நிதிக்கூற்று, நிதிக் கூற்றின் திருத்தம், , குறை நிரப்பு மதிப்பீடு மற்றும் அதற்கு உரிய ஒதுக்கீட்டு நியதிச் சட்டங்களைத் தயாரித்து கௌரவ அமைச்சரவையின் அங்கீகாரம், கௌரவ ஆளுநரின் சிபார்சின் கீழ் சபையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
  • மாகாண நிதி அமைச்சருக்கு ஆணைச்சீட்டினைச் சமர்ப்பித்து செலவிற்கான அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளல்.
  • காரியாலயத் தேவையினை கருத்தில் கொண்டு மதிப்பீட்டு ஏற்பாடுகளுக்குத் தேவையான திருத்தங்களுக்காக வகைமாற்றச் செயன்முறைக்கு இணைங்க நடவடிக்கை எடுத்தல்.
  • முற்பண எல்லைகளைத் திருத்துவதற்காக சபையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ளுதல்.
  • அத்தியாவசிய மற்றும் அவசரமான  அத்துடன் எதிர்பாராத  சந்தர்ப்பங்களில் காரியாலயங்களுக்குத் தேவையான செலவுகளை மேற்கொள்வதற்காக பொதுச்சேவை செயற்றிட்டத்தின் கீழ் ஏற்பாட்டினை ஏற்படுத்திக் கொடுத்தல்.