• கொடுப்பனவுப் பிரிவின் பொறுப்புக்களும் கடமைகளும்
  1. பிரதேச நிர்வாகத்தின் கீழ் மேல் மாகாணத்தின் எல்லாப் பிரதேச செயலாளர் காரியாலயங்களுக்காக ஏற்பாட்டினை விடுவித்தல் .
  2. பிரதேச நிர்வாக செயற்றிட்டத்தின் கீழ் ஒதுக்கீட்டுக் கணக்குகளை பிரதேச செயலாளர் காரியாலயங்களில் இருந்து பெற்றுக்கொண்டு அத் தகவல்களை ஒதுக்கீட்டுக் கணக்கில் உள்ளடக்குதல்.
  3. மேல் மாகாணக் காரியாலயங்களின் உத்தியோகத்தர்களுக்காக உள்நாட்டுப் பயிற்சி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஏற்பாட்டினை விடுவித்தல் மற்றும் மேல் மாகாணத்தின் எல்லா உத்தயோகத்தர்களினதும் பயிற்சி நடவடிக்கை பிரதம செயலாளர் காரியாலயத்தின்  பயிற்சிப்பிரிவு மற்றும் மொறன்ன பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் அதற்காக முற்பணத்தினைப் பெற்றுக்கொடுத்தல்.
  4. மொறன்ன பயிற்சி நிலையத்தில் காணப்படும் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் செலுத்துதல், கடன் முற்பணங்களை செலுத்துதல்  மற்றும்  தாபனத்தின் எல்லா நிர்வாகச் செலவுகள் போன்ற கொடுப்பனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  5. நிதி முத்திரை போன்ற நிதி ரீதியிலான நிதிப்பெறுமதி வாய்ந்தவையானவை இல்லாமல் போன சந்தர்ப்பத்தில் அந்த நிதியினை அறவிட வேண்டியவர்களிடம் இருந்து அறவிடுதல் அல்லது வெட்டி விடுதலை மேற்கொள்ள காலம் ஒன்று தேவைப்பட்டால் அதற்காக முற்பணத்தினைப் பெற்றுக்கொடுத்து மீண்டும் தீர்ப்பதற்காக வேறு முற்பணக் கணக்கு ஒன்றினைப் பேணிச் செல்லுதல்.
  6. மேல் மாகாண சபையின் பாடசாலைகளுக்காக பல்வேறுபட்ட தேவைகளுக்கிணங்க காணியினைப் பெற்றுக்கொள்ளும்போது அதற்காக ஏற்பாட்டினை விடுவித்தல்.
  7. பிரதம செயலாளர் காரியாலயத்தின் சம்பளம், கடன் முற்பணம் உள்ளிட்ட எல்லாக் கொடுப்பனவு, நடவடிக்கையும்,கொடுப்பனவுக்கான எல்லா கணக்குகளும் (ஒதுக்கீட்டுக் கணக்கு, முற்பணக் கணக்கு, கணக்குப் பொழிப்பு) வங்கி கணக்கிணக்கக் கூற்று வங்கி கணக்கிணக்கக் கூற்று மற்றும் மதிப்பீட்டினைத் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள்.